பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்: வளர்ந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் - பிரதமர்
வளர்ந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல உறுதியேற்போம் என பிரதமர் மோடி கூறியது குறித்து...

பிரதமர் மோடி - கோப்புப் படம்
பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில் வளர்ந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல உறுதியேற்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று பிரிவினை கொடுமைகள் நினைவு நாள். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் தைரியத்தையும் நாம் இன்று நினைவுகூர்கிறோம்.
வரலாற்றில் பல உயிர்களைச் சிதைத்த தருணம். இந்த நாளில்தான் பல குடும்பங்களில் அன்புக்குரியவர்களை இழந்தனர், துன்புற்றனர்.
அதே சமயம், இவற்றைக் கடந்து மக்கள் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி மீண்டும் உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றினர். இது அவர்களின் மன வலிமையைக் காட்டுகிறது.
இந்த நாளில் நாட்டின் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்கப்படட்டும். மேலும், வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரிவினை நாளில் எடுக்கப்பட்டபடம்... - ANI
1947-ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது. இந்தப் பிரிவினையில் சுமார் 2 கோடி பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். உலகின் பெரிய இடப்பெயர்வாக இது அமைந்தது.
இந்தப் பிரிவினையால் இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் இருந்த இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் அகதிகள் ஆகினர். மேலும், இந்தச் சமயத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சுமார் 10 லட்சம் பேர் வரையில் பலியாகினர்.
இந்தப் பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஆக. 14 ஆம் தேதியில் பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
Summary
PM Modi pays tribute on Partition Horrors Remembrance Day and calls for unity
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







