ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது: பிரதமர் மோடி

2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது குறித்து...

PM Modi says India aims to become developed nation by 204

தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி. - பிடிஐ

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:00 pm IST

புதுதில்லி: 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையியில் இருந்து வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கும் தருணம் இது. புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு நாடு உற்சாகத்துடனும் ஆர்வமுடனும் முன்னேறி வருகிறது.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், இத்தகைய முயற்சிகளை நான் மிகுந்த மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன். இந்த முயற்சிகளின் விளைவாக 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ஒரு காலத்தில் பொருளாதாரங்களில் 'பலவீனமான ஐந்து நாடு' களில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தியா, இன்று உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை, இலக்கை இந்தியா கொண்டுள்ளது என்று மோடி கூறினார்.

பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சாதனைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் உற்பத்தி ஐந்து மடங்கு, மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்கு, நவீன ரயில் பெட்டி உற்பத்தி 21 மடங்கு மற்றும் அலைபேசி உற்பத்தி 33 மடங்காகவும் அதிகரித்துள்ளது. இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 மடங்கும் அதிகரித்துள்ளது.

சாமானிய மக்களின் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு இதே தீவரத்துடன் பானியற்றி உள்ளது. ஆயிரக்கணக்கான நடைமுறைச் சிக்கல்களை நீக்கியதுடன், காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், நிர்வாகத்தில் நாடு மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது என்று கூறினார்.

2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை, இலக்கை நோக்கி முன்னேறும்போது, ​​இந்தியா பல முன்னோடியில்லாத நெருக்கடிகளை வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில், நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டுள்ளோம். கரோனா-19 பெருந்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்கள் உருவாக்கிய சவால்களையும் நினைவு கூர்ந்த மோடி, இந்த நெருக்கடிக் காலங்களில், தடுப்பூசிகள், எரிபொருள், சமையல் எரிவாயு, டீசல் மற்றும் உரங்களின் பற்றாக்குறை குறித்து மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பல கணிப்புகளும் வதந்திகளும் பரப்பப்பட்டது. அவையெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட கொள்கைகள், முன்னேற்பாடுகள் மற்றும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை இந்தச் சவால்களை திறம்பட எதிர்கொள்ள நாட்டிற்கு உதவின என்று மோடி கூறினார். 'குடிமக்களே தெய்வம்' என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த அரசின் அணுகுமுறை, கடந்த பத்தாண்டுகளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் நெருக்கடிக் காலங்களில் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்தது. இன்று நாட்டில் போதுமான அளவிற்கு எரிவாயு, பெட்ரோல் மற்றும் யூரியா ஆகியவை இருப்பதாகவும், தனது சொந்தத் திறன்களின் வலிமையுடன் நாடு நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

உலக நாடுகள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதிலும் நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், துரதிர்ஷ்டவசமாக, இக்கட்டான காலகட்டத்திலும் சில நாடுகள் பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் போன்ற வளங்களை தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறினார். இத்தகைய சவாலான சூழலில், கடந்த பத்தாண்டுகளாக 'சுயசார்பு' என்ற மந்திரத்தின் வழிகாட்டுதலுடன் நாடு சரியான பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய சவால்களை இந்தியா எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்திருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

வளங்களின் பற்றாக்குறையால் ஒரு நாடு முடங்கிவிடுவதில்லை, மாறாக அதன் சிந்தனையில் உள்ள வரம்புகளாலேயே அது முடங்கிவிடுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். இன்று இந்தியா கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருப்பதற்கும் அத்தகைய சிந்தனை வரம்புகளே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக இருந்த கடல்சார் பகுதிகளில் 99 சதவீதத்தை, இப்போது செயல்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக அரசு மாற்றியுள்ளோம். இப்போது கடலுக்கு அடியில் ஆய்வுப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதோடு, புதிய வளங்களைக் கண்டறியும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

Summary

Prime Minister Modi said that over the past twelve years, crores of citizens of the country, with their determination and dedication, made every possible effort to take the country to new heights

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.