ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளது பற்றி...

Narendra Modi with Israeli Prime Minister Netanyahu.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நரேந்திர மோடி. - படம் - எக்ஸ்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) நன்றி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் கொண்டாட்டம் நேற்று (ஆக. 15) கோலகலாமாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், “ சுதந்திர நாளைக் கொண்டாடும் இந்தியா மற்றும் எனது நண்பர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவும் இஸ்ரேலும் ஓராண்டு இடைவெளியில் சுதந்திரம் அடைந்தன.

தொன்மையான நமது இரு நாடுகளும், நம் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக, எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது கண்டுபிடிப்புகளும், நட்பும் எல்லையற்றவை. மிகச் சிறந்தவை இனி வரவிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ”வாழ்த்து தெரிவித்த பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி. இஸ்ரேல் - இந்தியா இடையே உள்ள சிறப்பு மூலோபாய கூட்டுறவு மேலும் வலுப்பெறும். புதிய வாய்ப்புகளை உருவாக்கி, நமது நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்புகளை ஆழமாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Narendra Modi thanked Israeli Prime Minister Netanyahu on Sunday (Aug. 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.