ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் இன்று உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஆக.14) உரையாற்றுகிறாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஆக.14) உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, தில்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் உரை நிகழ்த்தவுள்ளாா்.

அவரின் உரையை ஆகாசவானி மற்றும் தூா்தா்ஷனின் தொலைக்காட்சிகள் நேரலை செய்யவுள்ளன. முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவா் உரை இருக்கும். அதன்பிறகு தூா்தா்ஷனின் பிராந்திய தொலைக்காட்சிகளில் அந்தந்த பிராந்திய மொழிகளில் முா்முவின் உரை ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ்வாறு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.