ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:27 pm IST

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியா காங்கஸ் தங்கம் வென்றார்.

தமிழ்நாடு அரசின் புதிய நீர்வளத் துறை செயலாளராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி பலியானார்.

விராலிமலை, கரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தன்னை அவதூறாகப் பேசினாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில், மாணவி ஒருவரின் மன்னிப்புக் கோரும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு கருத்து இன்று வைரலாகி வருகிறது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட நீரிழிவு மருத்துவ சோதனையில் நான்கு மாணவர்களில் ஒருவருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை ரூ.200 குறைத்துள்ளது. அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 1,05,760-க்கு விற்பனையாகிறது.

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று (ஆகஸ்ட் 1) தண்ணீர் திறக்கப்படாததால் கால்வாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.