ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நடப்பு ஆண்டில்(2026) இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Commercial LPG price reduced today

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு - கோப்புப்படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 9:36 am IST

மேற்காசிய போா்ப் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வரத்து சீரானதால், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை ரூ.200 குறைத்துள்ளது. அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும் 1 ஆம் தேதி வணிகப் பயன்பாடுக்கான சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகியவற்றின் விலையை மாற்றியமைப்பது போல ஆகஸ்ட் 1 ஆம் தேதியான சனிக்கிழமை அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, தில்லியில் ரூ.202 குறைக்கப்பட்டு ரூ.2,728-க்கும், கல்கத்தாவில் ரூ. 209 குறைக்கப்பட்டு ரூ. 2,872.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் பிற வணிகங்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கும் விதமாக உள்ளது.

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை அந்த சிலிண்டர் விலை ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக விலை குறைப்பு

ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விலை குறைப்பைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்ட்டிலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஈரான் போர் மற்றும் மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்பட்ட விநியோகச் சிக்கல்களால் சர்வதேச அளவில் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்திருந்தது; அந்த உயர்வைச் சற்றே ஈடுசெய்யும் வகையில் இந்த விலை குறைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது.

மேற்காசிய போா்ப்பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்த விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

This is the second straight monthly reduction in commercial LPG prices after a similar cut in July.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.