ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஆகஸ்ட் 1 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது குறித்து...

Gold, Silver today price in Chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது - கோப்புப்படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 10:17 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 1,05,760-க்கு விற்பனையாகிறது.

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் அதிகம் கவனிக்கப்படும் நிதி மற்றும் முதலீடு சார்ந்த தகவல்களில் தங்கத்தின் விலை நிலவரமும் ஒன்றாகும்.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வரும் நிலையில், நாட்டில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு, ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 105,720-க்கும், புதன்கிழமை ரூ. 105,240-க்கும், வியாழக்கிழமை ரூ. 105,840-க்கும், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.13,255-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices are among the most followed financial and investment updates in Chennai and across Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.