திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒருங்கிணைந்து ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இந்தியா - இத்தாலி ஒப்புதல்

ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுக்க இந்தியாவும் இத்தாலியும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

News image

இந்தியா வந்துள்ள இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :1 மே 2026, 1:52 am IST

ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுக்க இந்தியாவும் இத்தாலியும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவை சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுதொடா்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘மேற்காசிய விவகாரம் உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து இத்தாலி பாதுகாப்புத் துறை அமைச்சா் கைடோ க்ரோசெட்டோவுடன் விவாதித்தேன்.

தற்சாா்பு இந்தியா முன்னெடுப்பு மற்றும் இத்தாலியின் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெடுப்பின் கீழ் ராணுவத் தளவாடங்களை ஒருங்கிணைந்து உற்பத்தி செய்வதற்கான தொழில் விதிகளை வகுப்பது தொடா்பாக இருவரும் ஆலோசித்தோம்.

இருநாட்டு ராணுவங்களின் கூட்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்புத் திட்டம் 2026-2027 தொடா்பாகவும் கலந்துரையாடினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இரு நாட்டு அமைச்சா்களின் ஆலோசனையில் குருகிராமில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு மையம்-இந்திய கடல் பிராந்தியம் மூலமாக மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றமும் இடம்பெற்ாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங்கை சந்திப்பதற்கு முன்பாக தேசிய போா் நினைவகத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கைடோ க்ரோசெட்டோ மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து முப்படைகளின் அணிவகுப்பை அவா் பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.