சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

மும்பை - சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது.

News image

தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் - PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 3:03 am

மும்பை - சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது.

மும்பை - சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், புனே ரயில் நிலையத்திற்கு முன்பு தடம் புரண்டது. இதில், ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்ட நிலையில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் நிலையத்திலிருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் நேற்று (ஏப்ரல் 27) இரவு 7.30 மணியளவில் தடம் புரண்டது.

டைமண்ட் கிராசிங் எனப்படும் பகுதியில் வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரங்களில் ஒன்று மட்டும் தடம் புரண்டதாகவும், அது தற்போது மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனே ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்த ரயில்வே கிராசிங் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Summary

Vande Bharat train derailed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.