அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி..

News image

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்தது - TNIE

Updated On :20 ஏப்ரல் 2026, 6:43 am

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து காகோர்ட் கிராமத்திற்கு அருகே இன்று காலை 10 மணியளவில் பேருந்து கொண்டை ஊசி வளைவில் உதம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி உருண்டு கீழே விழுந்தது.

விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். பின்னர், போலீஸார், மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துசென்று காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த 15 பேரின் உடல்களும் அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உதம்பூர் துணை ஆட்சியர் மிங்கா ஷெர்பாவிடம் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

At least 15 people were killed and 20 others injured after a passenger bus rolled down a hill in Jammu and Kashmir’s Udhampur on Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.