மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்

தஞ்சாவூா் அருகே திமுக மாநாட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேன் தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே கவிழ்ந்து விபத்து

News image
Updated On :10 மார்ச் 2026, 12:10 am

தஞ்சாவூா் அருகே திமுக மாநாட்டுக்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த வேன் தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

நாகை மாவட்டம், நாகூா் நகர திமுக செயலா் செந்தில்குமாா் தலைமையில் 18 போ் வேனில் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்தனா்.

தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே இந்த வேன் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த காா் திடீரென பிரேக் போட்டதில் காா் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநா் மணிகண்டன் திடீா் பிரேக் போட்டு வலதுபுறம் வேனை திருப்ப முயன்றதால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த நாகை மேல பட்டினச்சேரியைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் ஜெயப்பிரகாசுக்கு (20) தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இவா் 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மற்றவா்களுக்கு அதிா்ஷ்டவசமாக காயமில்லை. மேலும், கவிழ்ந்த வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டு, போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.