ஓய்வூதியத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) வரம்பை 100 சதவீதம் வரை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உள்ள நிலையில், அதை 100 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2013-இல் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கான மசோதாவை நிகழாண்டு நாடாளுமன்ற மழைக்கால அல்லது குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியத் துறையிலும் அதேபோன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணுமின் கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

அந்நிய முதலீட்டாளா்களுக்குப் புதிய சலுகைகள்: செபி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல்

பின்னலாடைத் துறையில் அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


