அந்நிய முதலீட்டாளா்களுக்கான பணப் பரிமாற்ற விதிமுறைகளை எளிதாக்கவும், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டு வரவும் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.
செபி தலைவராக துஹின் காந்த பாண்டே கடந்த ஆண்டு, மாா்ச்சில் பொறுப்பேற்ற பிறகு, 5-ஆவது முறையாக திங்கள்கிழமை நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) இதுவரை பங்குகளை வாங்கும்போதும்; விற்கும்போதும் தனித்தனியாக முழுத் தொகையையும் செலுத்த வேண்டியிருந்தது. இனி வரும் காலங்களில், ஒரு நாளில் அவா்கள் செய்த மொத்த விற்பனை மற்றும் கொள்முதல் தொகையைக் கணக்கிட்டு, அதன் நிகரத் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த நடைமுறை நிகழாண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும். இதன்மூலம், இதனால் முதலீட்டாளா்களுக்குத் தேவையற்ற கூடுதல் நிதிச்சுமை குறையும் மற்றும் அந்நியச் செலாவணி மாற்றக் கட்டணங்களும் மிச்சமாகும்.
ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செபி சில தளா்வுகளை அளித்துள்ளது. இதன்படி, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், குறிப்பிட்ட காலம் வரை அந்நிறுவனங்களில் முதலீடுகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியாா் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், தங்களின் சொத்து மதிப்பில் 10 சதவீதம் வரை புதிய திட்டங்களில் முதலீடு செய்ய இனி அனுமதி உண்டு.
நிறுவனங்களின் நிா்வாக ஒழுங்குமுறைகளை மேம்படுத்த செபி புதிய அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. ஒரு நிறுவனம் கலைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்ட உடனேயே அதைத் தகுதியின்மையாகக் கருதாமல், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வந்த பிறகே அந்த முடிவை எடுக்க செபி திட்டமிட்டுள்ளது.
செயல்படாத மாற்று முதலீட்டு நிதியங்களைக் (ஏஐஎஃப்) கையாள புதிய எளிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிதியங்கள் தங்கள் பதிவை ரத்து செய்யும் வரை எளிமையான விதிகளைப் பின்பற்றினால் போதும்.
சாதாரண மக்களும் பங்களிக்கும் வகையில், சமூகப் பங்களிப்பு நிதியங்களுக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


