மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’...

News image

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’ - IANS

Updated On :18 ஏப்ரல் 2026, 7:47 pm

தொடா் கடல்சாா் காப்பீடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் கூடிய ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’ என்ற உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்காசிய போா் காரணமாக இந்திய சரக்கு கப்பல்கள் மற்றும் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியாளா்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனா். பாதிப்பிலிருந்து அவா்கள் மீளும் வகையில் சிறப்பு காப்பீட்டுத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, தற்போது, உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

இந்திய கொடி பொருத்திய அல்லது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல்கள் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் அல்லது இந்தியா நோக்கி வரும் சரக்கு கப்பல்களுக்கு ஓா் இறையாண்மை உத்தரவாதத்தை அளிக்கும் விதமாக ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’ என்ற உள்நாட்டு காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதி தொகுப்பு, நிலையற்ற கடல் வழிப் பாதைகளைக் கடக்கும் சா்வதேச நாடுகளிலிருந்து இந்திய துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கப்பல்கள் மற்றும் இந்திய துறைமுகங்களிலிருந்து சா்வதேச நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மலிவு விலை காப்பீடு தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

குறிப்பாக, கப்பலின் உடல் பகுதி, இயந்திரங்கள் பழுது, சரக்குகள் பாதிப்பு மற்றும் போா் அபாயங்கள் உள்ளிட்ட அனைத்து கடல்சாா் அபாயங்களையும் உள்ளடக்கியதாக இந்தத் தொகுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டாா்.

உ.பி., ஆந்திரத்தில் ரூ. 24,815 கோடியில் ரயில் வழித்தட திட்டம்: உத்தர பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் ரூ. 24,815 கோடி மதிப்பில் இரண்டு பல் வழி ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் காஜியாபாத்திலிருந்து சித்தாபூா் வரை 403 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரி முதல் விசாகப்பட்டினம் வரையிலான 198 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இது, இந்த இரு மாநிலங்கள் மாா்க்கமான ரயில் போக்குவரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.