பிகார் அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுக்கு அவர்கள் கண்காணிப்பில் இயங்கக்கூடிய துறைகள் இன்று (ஏப்.15) ஒதுக்கப்பட்டுள்ளன.
பிகாரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்த மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனையடுத்து, பிகாரின் துணை முதல்வராக இருந்த சாம்ராட் செளதரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு புதன்கிழமை (ஏப்.15) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதேபோல, துணை முதல்வர்களாக விஜய் குமார் சௌதரி மற்றும் பிஜேந்திர பிரசாத் இருவரும் பதவியேற்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவர்களுள் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
பிகார் அமைச்சரவை ஒதுக்கீட்டில், முதல்வர் சாம்ராட் சௌதரி 29 துறைகளைத் தக்கவைத்துக் கொள்கிறார். அதில் உள்துறை, வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு உள்ளிட்டவை முக்கிய துறைகளாக உள்ளன.
துணை முதல்வர் விஜய் குமார் சௌதரிக்கு நீர்வளம், சிறுபான்மையினர் நலன், கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 10 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு எரிசக்தி மற்றும் நிதி உள்ளிட்ட 8 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


