ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கூறியபடியே பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
மாநிலங்களவை எம்.பி.யாக நாளை (ஏப். 10) நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார். அதன்பின்னர் ஓரிரு நாள்களில் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று ஜேடியு மூத்த தலைவர் விஜயகுமார் சௌத்ரி கூறியுள்ளார்.
அதன்படி வருகிற ஏப். 14 ஆம் தேதி பிகாரில் புதிய முதல்வர் பதவியேற்பார் என்றும் தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சாம்ராட் சௌத்ரி, பாஜக தலைமையுடன் ஆலோசிக்க தில்லி சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே 10 முறை முதல்வராகப் பதவியேற்றவர் என்ற பெருமைக்குரியவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Samrat Chaudhary likely to be next Bihar CM, Nitish Kumar to resign next week
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


