மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
தேசிய அரசியலுக்குச் செல்வதாக அறிவித்த பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, பிகார் மாநிலத்தில் புதிய அரசு விரைவில் அமையும் என்றும், புதிய முதல்வருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் நிதீஷ் குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, இன்று காலை தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்துள்ளார்.
விரைவில் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சரவையைக் கலைப்பதற்கான கோரிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாஜக முதல்வா் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஐக்கிய ஜனதா கட்சியில் இணைந்த நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், பிகார் துணை முதல்வராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவுள்ள நிதீஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
Summary
Bihar Chief Minister Nitish Kumar resigns from MLC post!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



