மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

பிகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்வது பற்றி...

News image

நிதீஷ் குமார் - IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 12:53 pm

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வருகிற ஏப். 13 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கூறியபடியே பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் பிகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளதால் அவர் இன்னும் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை.

சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை என பல்வேறு பதவிகளில் இருந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

மாநிலங்களவை எம்.பி.யாக வருகிற ஏப். 10 ஆம் தேதி அவர் பதவியேற்பார் என்று தெரிகிறது. முன்னதாக தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார் வருகிற ஏப். 13 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகாரின் அடுத்த முதல்வர் முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பதவியேற்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

Summary

Nitish Kumar to resign as Bihar CM on April 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.