திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

சாம்ராட் செளதரி - படம்: ஏஎன்ஐ

Updated On :14 ஏப்ரல் 2026, 4:32 pm IST

பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், பிகார் முதல்வர் பதவியை இன்று(ஏப். 14) ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிகார் மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக சாம்ராட் செளதரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் பாஜகவின் மத்திய பார்வையாளரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.

பிகார் அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஏப். 14 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிதீஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து, கடிதத்தை ஆளுமர் சையது அடா ஹஸ்னைனிடம் அளித்தார்.

இந்த நிலையில் பிகார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி நாளை(ஏப். 15) பதவியேற்கவுள்ளார்.

பிகார் மாநிலத்தில் பாஜவைச் சேர்ந்த முதல் முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வாகியுள்ளார்.

2023 முதல் ஜூலை 2024 வரை பிகார் மாநில பாஜக தலைவராகவும் சாம்ராட் செளதரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Samrat Chaudhary, the Deputy Chief Minister of Bihar, has been selected as the state's new Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.