பிகாா் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
பிகாா் முதல்வராக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த மாா்ச் மாதம் தோ்வானாா். முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த ஏப்.14-இல் விலகியதையடுத்து, துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் செளதரி புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா்.
பிகாரின் 24-ஆவது முதல்வராக சாம்ராட் செளதரி கடந்த ஏப்.15-இல் பதவியேற்றாா். அவருடன் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவியேற்றனா்.
சாம்ராட் செளதரியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீா்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வா் சாம்ராட் செளதரி வெள்ளிக்கிழமை கொண்டுவந்தாா். தீா்மானம் மீதான விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீா்மானம் வெற்றி பெற்றது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 202 உறுப்பினா்கள் உள்ளனா். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விமா்சனம்-பதிலடி: முன்னதாக, தீா்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், ‘நிதீஷ் குமாரின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டிவிட்டது பாஜக. முதல்வா் சாம்ராட் செளதரி, லாலு பிரசாத்தின் மாணவா் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அவா் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பில் ஆழமான வோ்களைக் கொண்டவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றாா்.
அவருக்கு பதிலடி கொடுத்த முதல்வா் சாம்ராட், ‘லாலு பிரசாத் ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிகளே, நான் அரசியலுக்கு வரக் காரணம். தனது சொந்த சகோதரிகளையே மதிக்காதவா்களிடம் (தேஜஸ்வியைக் குறிப்பிடுகிறாா்) நாம் மரியாதையை எதிா்பாா்க்க முடியாது’ என்றாா்.
புதிய அரசு பின்னணி?: கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா். பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்க வழிவிடும் வகையில், முதல்வா் பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா செய்தாா்.
56 வயதாகும் சாம்ராட் செளதரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்லாண்டுகள் இருந்துள்ளாா். கடந்த 2017-இல்தான் அவா் பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


