அரசு இல்லத்திலிருந்து தலைமைச்செயலகத்துக்கு பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை நடந்தே சென்றுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போா்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும்போது, இந்தியாவின் அந்நிய செலாவணி குறையும் நிலையில், எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆகையால், பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய வாகன அணிவகுப்பைப் பாதியாகக் குறைத்தும் மின்சார வாகனங்களில் பயணித்தும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி அதிகாரிகளுடன் தனது அரசு இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு, சுமார் 500 மீட்டர் வரை நடந்தே சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்ராட் சௌதரி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வீட்டிலிருந்தே வேலை செய்வது, வாகனமில்லா தினத்தைக் கடைபிடிப்பது, அரசு அதிகாரிகள் சார்ந்த அனைத்து சந்திப்புகளையும் இணைய வழியில் நடத்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
Summary
Bihar Chief Minister Samrat Choudhary walked from his official residence to the Secretariat on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









