மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையை திரிணமூல் காங்கிரஸ் அரசு பின்பற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹால்டியாவில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல. மேற்கு வங்கத்தின் பிரமாண்ட வளர்ச்சியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல். தேர்தலின் முதல் மற்றும் முக்கிய நடவடிக்கை, இரக்கமற்ற அரசை வீட்டுக்கு அனுப்புவதாகும்.
இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், நாட்டின் பல மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதே. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசு மட்டும் மாநிலத்தைக் கீழ்நோக்கித் தள்ளுகிறது. ஒரு காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக இருந்த மேற்கு வங்கம், தற்போது அனைத்து வளர்ச்சிகளிலும் ஆளுங்கட்சியால் கீழே தள்ளப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ், தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றுவதற்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுகிறது.
பிரதமரை எதிர்ப்பதால் மட்டும் மாநிலம் முன்னேறாது. பிரதமரும் முதல்வரும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான், லாபமடைய முடியும்.
மேங்கு வங்க இளைஞர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் இரு மடங்கு துரோகமிழைத்துள்ளது. இளைஞர்களுக்கு எதிராக அவர்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபட 100 ஆண்டுகளானாலும் முடியாது.
தனியார் துறையை மாநிலத்திலிருந்து ஆளுங்கட்சி வெளியேற்றி விட்டது. தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் இருக்குமிடங்களிலும்கூட ஊடுருவல்காரர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அரசு வேலைகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
அவர்கள் ஊடுருவல்காரர்களையும் குண்டர்களை மட்டுமே வளர்த்துள்ளனர். அச்சத்தைப் பரப்புவது மட்டுமே அவர்களுக்கு தெரியும்" என்று தெரிவித்தார்.
Summary
TMC following religion-based reservation policy to secure its vote bank, says PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை சீரழித்தவர் மமதா : பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

