மேற்கு வங்க தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், பிரசாரத்திலும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து பேசுபொருளாகியுள்ளது.
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 27 சதவிகித அளவிலான சுமார் 2 லட்சம் முஸ்லிம்கள் உள்ள நிலையில், பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட தேர்தலில் நிறுத்தாதது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2021 தேர்தலில் 8 முஸ்லிம் வேட்பாளரகளையும், 2016 தேர்தலில் 3 பேரையும் பாஜக நிறுத்தியிருந்தது.
இருப்பினும், காங்கிரஸ் கட்சியிலிருந்து 78 பேரும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து 47 பேரும், இடது முன்னணியிலிருந்து 26 முஸ்லிம் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
Summary
No Muslim name finds place in BJP's West Bengal list
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நவீன் வாக்குறுதி!

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக: மமதா குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

