மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும். பத்திரிகையாளர்களில் எந்தப் பிரிவினையும் இல்லாமல் குறிப்பிட்ட தகுதி மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்” என அவர் கூறினார்.
மேலும், ”நமக்காக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. நமக்கு எதிராக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. பத்திரிகையாளர்கள் அனைவரும் நமது நண்பர்களே. உங்களுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
இதன்மூலம் வழங்கப்படும் தொகை மிக அதிகமாக இல்லாவிட்டாலும் ஊடகத் துறையினருக்கு நிதி ஆதரவும் பாதுகாப்பு உணர்வும் வழங்கும் நோக்கில் இதைக் கொண்டுவரவுள்ளோம்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்கள் வகுக்கப்பட்டு பின்னர் பகிரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகிறது.
Summary
Rs 5,000 for journalists: BJP promises monthly allowance in West Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000; பொது சிவில் சட்டம்! மேற்குவங்க பாஜக வாக்குறுதிகள்!

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நவீன் வாக்குறுதி!

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!
மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

