இந்தியாவில் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, டேட்டிங் செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. அவர்களில் 65 சதவிகிதம் ஆண்களும், 35 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களே. மேலும், பெண்களின் பங்களிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக 148 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக டேட்டிங் செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் முதல் 1.5 மணிநேரம் வரையில் பயனர்கள் அரட்டையடிக்கின்றனர். குறிப்பாக, மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையிலும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையிலும் செயலியின் பயன்பாடு உச்சத்தை அடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஆண்கள் - 25 முதல் 30 வயதுடைய பெண்களை நாட முயல்வதாகவும், பெண்கள் - 30 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண்களை (குறிப்பாக மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் போன்ற பொருளாதார ரீதியாக தொழில் வல்லுநர்கள்) விரும்புகிறார்கள்.
டேட்டிங் செயலி பயன்பாட்டில் 18 சதவிகித பயனர்களுடன் பெங்களூரு முதலிடமும், 17 சதவிகித பயனர்களுடன் ஹைதராபாத் இரண்டாமிடமும், தில்லியில் 11 சதவிகிதமும், மும்பையில் 9 சதவிகிதமும், புணேயில் 7 சதவிகிதமும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
கடந்தாண்டு ஜூன் மாதத்தின் தரவுகளின்படி, திருமணம் மீறிய உறவுகள் இருந்தோரில் தமிழகத்தின் காஞ்சிபுரத்திலும் அதிகளவில் இருந்ததாக ஆய்வுகள் கூறின.
Summary
Four million Indians on this extramarital dating app
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
டேட்டிங் செயலி மூலம் ஆசை காட்டி ஏமாற்றி இளைஞரைக் கடத்தி கொள்ளை: ஐவா் கைது

டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


