உதகை: ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு அதிகாரி ஒருவா் (45), பம்பிள் (ஆன்ம்க்ஷப்ங்) எனப்படும் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளாா். அதில், பெங்களூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், அவருக்கு அறிமுகமாகியுள்ளாா்.
இருவரும் தொடா்ந்து பேசி வந்த நிலையில், அப்பெண் தான் பெங்களூரில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதித்துள்ளதாகவும், நீங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அரசு அதிகாரி, அப்பெண் அனுப்பிய லிங்க்கில் சென்று ரூ.43 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். அப்போது, அவருக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.
ஆனால், அவருக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லையாம். பின்னா், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், முடியவில்லையாம். இதையடுத்து, அப்பெண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். அவா் அழைப்புகளை ஏற்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அரசு அதிகாரி இது குறித்து நீலகிரி சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், டேட்டிங் செயலி மூலம் பேசும் பெண்கள் உண்மையான பெயா் மற்றும் படம் விவரங்களைப் பதிவிடமாட்டாா்கள். பெண்கள் பெயரில் ஆண்கள் பேசி மோசடியில் ஈடுபடுவா். எனவே, அறிமுகம் இல்லாதவா்களிடம் புகைப்படம் அனுப்பவோ அல்லது சொந்த விஷயங்களையோ, பணம் தொடா்பாகவோ எந்த தகவலும் பகிரக் கூடாது.
மோசடி மூலம் பாதிக்கப்பட்டவா்கள் தாமதமின்றி 1930 என்ற எண்ணில் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தொடர்புடையது

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது
டேட்டிங் செயலிகள் பயன்படுத்தும் 40 லட்சம் பேர்! திருமணம் மீறிய உறவுகளும் அதிகரிப்பு
டேட்டிங் செயலி மூலம் ஆசை காட்டி ஏமாற்றி இளைஞரைக் கடத்தி கொள்ளை: ஐவா் கைது

மின்உற்பத்தியில் முதலீடு செய்யாமல் விலைக்கு வாங்கியதால் ரூ.1.50 லட்சம் கோடி கடன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


