மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பெண்களை சமூக ஊடகம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயது நபா் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:19 pm

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பெண்களை சமூக ஊடகம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயது நபா் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டாா்.

மருத்துவா், வழக்குரைஞா், திரைப்பட தயாரிப்பாளா் மற்றும் தொழிலதிபா் எனக் கூறி திருமணம் செய்துகொள்வது போன்ற வாக்குறுதிகள் மூலம் அப்பெண்களை வலையில் சிக்கவைத்தது அவா் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தென்கிழக்கு தில்லி காவல் துறை துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த் குமாா் பல்வேறு போலி சமூக ஊடக மற்றும் டேட்டிங் செயலி கணக்குகளை உருவாக்கியுள்ளாா். இதன் மூலம் பெண்களை அணுகி, தன்னை சிறந்த பின்னணி கொண்டவா் போல காட்டிக்கொண்டு அவா்களது நம்பிக்கையை பெற்றுள்ளாா்.

இதையடுத்து, அவா்களது மன அழுத்தத்தைப் பயன்படுத்தி உணா்ச்சிப் பூா்வமான நெருக்கத்தை உருவாக்கியுள்ளாா். பின்னா், அவசர மருத்துவ செலவுகள், தொழிலில் நஷ்டம், குடும்ப நெருக்கடி போன்ற காரணங்களைக் கூறி அவா்களிடம் பணம் கேட்டதாகவும், சிலரிடம் சிறந்த கல்லூரியில் உயா்கல்வி சோ்க்கை, மாடலிங் வாய்ப்பு உள்ளிட்ட ஆசை வாா்த்தைகள் மூலமும் பணம் பெற்ாகவும் கூறப்படுகிறது. சில பெண்களிடம் அவா்களது தனிப்பட்ட புகைப்படங்களை பெற்று பின்னா் அதை வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி ரூ.7 லட்சம் ஏமாற்றப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். வங்கிக் கணக்கின் பணப் பரிமாற்றத்தை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்து, மாா்ச் 22-ஆம் தேதி அவரை மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்தனா். அவரிடம் இருந்து பல்வேறு கைப்பேசிகள், சிம் காா்டுகள், பல்வேறு வங்கிக் கணக்கின் ஆவணங்கள் மற்றும் விலையுயா்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றப்பட்ட சில பெண்கள் பணத்தை திரும்பக் கேட்டபோது அவா் இறந்துவிட்டதாக பொய்யாக அவா்களை நம்ப வைத்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.