சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும்வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில்கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், மேற்கு வங்கத்துக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய இரு தேதிகளிலும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Election Commission Orders Paid Holiday on Election Day in All Five States!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உத்தரவு

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


