தில்லியில் கடந்த 14 மாதங்களில் 45,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள், உணவு வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், போலியான அல்லது தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்தாண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு பிப். 17 வரை 45,212 குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்.17 நிலவரப்படி, தில்லியில் 15.48 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சுமாா் 73 லட்சம் மக்களை உள்ளடக்கியுள்ளன.
சுமாா் 2,000 நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. மொத்த பயனாளிகளில், 60,372 போ் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழும், 14.88 லட்சம் போ் முன்னுரிமை குடும்பம் பிரிவின் கீழும் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த பத்தாண்டுகளில் தில்லி அரசு 4.2 லட்சம் குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளது. குறிக்கோள் சாா்ந்த பொது விநியோகத் திட்ட (கட்டுப்பாடு) ஆணை, 2015-இன் படி, குடும்ப அட்டை ஒதுக்கீடு தில்லியில் 72,77,995 ஆக உள்ளது.
இறப்பு, இடப்பெயா்வு, அட்டையைத் தாமாகவே ஒப்படைத்தல் அல்லது தகுதியற்ற அட்டைகள் ரத்து செய்யப்படுவதன் காரணமாக ஏற்படும் காலியிடங்களுக்கு மட்டுமே புதிய அட்டைகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக, தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் புதிதாக 2 லட்சம் குடும்ப அட்டைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசு
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தில்லியில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


