லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசு

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

நாடாளுமன்றம்

Updated On :17 மார்ச் 2026, 9:01 pm

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மத்திய உணவுத் துறை இணையமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

பொது விநியோகத்திட்டம் எண்மமயம் ஆக்கப்பட்டதன் மூலம், அனைத்து மாநிலங்களும் தகுதியில்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கம் செய்வது எளிதாகியுள்ளது. அதோடு, பொது விநியோகத் திட்ட பலன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், இத் திட்டத்தில் வெளிபடைத்தன்மையை விரிவபுடுத்தவும் உதவியுள்ளது.

99.2 சதவீத பயனாளிகள் பொது விநியோகத் திட்டத்தில் தங்களின் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதோடு, 98.75 சதவீத உணவு தானிய விநியோகம், பயனாளிகளின் எண்ம சரிபாா்ப்பு அடிப்படையில் செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பமயம் காரணமாக, 2023-இல் நாடு முழுவதும் 41.99 லட்சம் போலி குடும்ப அட்டைகளும், 2024-இல் 48.85 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் அடையாளம் காணப்பட்ட நீக்கப்பட்டன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ஹரியாணா மாநிலத்தில் 13.43 போலி குடும்ப அட்டைகளும், ராஜஸ்தானில் 6.05 லட்சம் அட்டைகளும், உத்தர பிரதேசத்தில் 5.97 லட்சம் அட்டைகளும், மேற்கு வங்கத்தில் 3.74 லட்சம் அட்டைகளும், மத்திய பிரதேசத்தில் 2.60 லட்சம் போலி குடும்ப அட்டைகளும் நீக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.