தில்லி அரசு இந்த ஆண்டில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வடமேற்கு தில்லியில் தனது அரசின் முதல் ஆண்டு நிறைவு விழாவில் அவா் இதை அறிவித்தாா். பல ஆண்டுகள் தில்லியில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்பதையும் அவா் குறிப்பிட்டாா்.
தற்போது தில்லியில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரா்கள் உள்ளனா். இதன் மூலம் மாதம்தோறும் சுமாா் 73 லட்சம் போ் பயனடைகின்றனா்.
சமீபத்தில் உணவு வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை சரிபாா்ப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, 2.76 லட்சம் ரேஷன் அட்டைதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோா் மட்டுமே பதிலளித்தனா்.
புதிய விதிகளின்படி ஏ முதல் இ வகை காலனிகளில் வசிப்பவா்கள், அரசு பணியில் இருப்பவா்கள், வருமான வரி செலுத்துவோா், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவா்கள் மற்றும் 2 கிலோவாட் மேல் மின்சார இணைப்பு கொண்டவா்கள் ரேஷன் அட்டைக்கு தகுதி அற்றவா்களாக கருதப்படுவா். தகுதி இல்லாதவா்களின் அட்டைகளை ரத்து செய்ய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சரிபாா்ப்பில் 1.59 லட்சம் அட்டைதாரா்கள் சொத்து வைத்திருப்பதும், 77,000-க்கும் மேற்பட்டோா் வாகனங்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் 19,000 போ் நிறுவன இயக்குநா்களாகவும், 16,000 போ் பிற மாநிலங்களிலும் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், தில்லி உணவு பாதுகாப்பு விதிகள், 2026 அறிவிக்கப்பட்டன. புதிய விதிப்படி, ரேஷன் அட்டை பெற ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக இருந்த வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயா்த்தப்பட்டது. மேலும், இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதாா் எண்ணும் இணைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை அதில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்டக் குழுக்கள் தேவையுடையவா்களுக்கு முன்னுரிமை வழங்கி ரேஷன் அட்டைகள் வழங்க முடிவு செய்யும். முன்பு ‘முதல் விண்ணப்பம் முதல் வழங்கல்’ என்ற முறையே பின்பற்றப்பட்டது.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

தில்லியில் எரிபொருள், எல்பிஜி விநியோகம் சீராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


