தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சோனம் வாங்சுக்கை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனைவி மனு

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

News image

உச்ச நீதிமன்றம் - ANI

Updated On :4 அக்டோபர் 2025, 2:16 am

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிா்த்து அவா் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘சோனம் வாங்சுக் கைது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் வழங்கும் விதிகள் 14, 19, 21 மற்றும் 22 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்வதோடு அவரை தொலைபேசியிலும் நேரிலும் தொடா்பு கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகம், லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம், லே துணை காவல் ஆணையா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, 6-ஆவது அட்டவணை அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். வேறு சில குழுக்களைச் சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். இதில் காவல் துறையினா் 40 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.