மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் பயின்ற ஆண் மாணவரை கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
5 நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு மாணவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், மாணவனுக்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது, அந்த மாணவன் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டுப் பணியாளரை மாணவனின் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியை, அவரை சந்திப்பதற்காக அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
ஆனால், சந்திப்புக்கு மறுத்த மாணவன் கடந்த ஓராண்டாக நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போக்சோ வழக்கில் பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், ஆசிரியையின் தோழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியையுடன் பாலியல் உறவில் ஈடுபட மாணவனை கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வயதான பெண்களுக்கும் பதின்பருவ சிறுவர்களுக்கும் இடையேயான பாலியல் உறவு இயல்பானவை என்று மாணவனிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.
மாணவனின் வாக்குமூலத்தின்படி, ஆசிரியையின் தோழி அதே பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணை கைது செய்ய மும்பை காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
Summary
A 40-year-old female teacher has been arrested for sexually assaulting a student multiple times over the past year.
இதையும் படிக்க : ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
கடலாடியில் போலி வழக்குரைஞா் கைது

மகள், மகனை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


