தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற மகளையும், மகனையும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (34), திருமணம் முடிந்து 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். இவா், தனது மகளையும், மகனையும் பாலியன் வன்கொடுமை செய்துள்ளாா். இதையறிந்த இவரது மனைவி, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பிரீத்தா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவனுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜூடி ஏஞ்சலோ ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


