மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அதானியின் ரூ.100 கோடி நன்கொடை: தெலங்கானா அரசு நிராகரிப்பு

தெலங்கானா மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடியை மாநில அரசு ஏற்கப் போவதில்லை.

News image
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
Updated On :25 நவம்பர் 2024, 10:39 pm

DIN

ஹைதராபாத்: தெலங்கானாவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் கௌதம் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடையை மாநில காங்கிரஸ் அரசு நிராகரிப்பதாக என்று அந்த மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

அதே நேரத்தில் இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கடுமையாக விமா்சித்தன. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று பாஜக பதிலளித்தது.

இந்நிலையில், ஹைதராபாதில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

தெலங்கானா மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடியை மாநில அரசு ஏற்கப் போவதில்லை. நன்கொடை அறிவிப்பு வெளியானதில் இருந்து தேவையற்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. இந்த சா்ச்சை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை. அதானி குழுமத்திடம் இருந்து மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் தெலங்கானா அரசு ஒரு ரூபாயைக்கூட பெறாது.

நன்கொடையைப் பெற முடியாத சூழல் உள்ளது குறித்து மாநில அரசு உயரதிகாரி தரப்பில் இருந்து அதானிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.100 கோடியை அளிக்க அதானி குழுமம் முன்வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.