புது தில்லி: அதிகாலை மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆரம்பித்த நாள் பகலில் வெப்பநிலை உயர்ந்து வழக்கமான நாளாக மாறியது.
மோசமான வானிலை காரணமாக 5 விமானங்கள் அதிகாலை திருப்பப்பட்டன. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான 4 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும் ஒரு விமானம் அகமதாபாத்துக்கும் திருப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்றின் தரம் அதிகாலை 4 மணிக்கு 359 புள்ளிகளில் இருந்துள்ளது. மிக மோசம் என்கிற அளவீட்டில் இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை- கடும் பிரிவில் 447 புள்ளிகளில் இருந்த காற்றின் தரம் திங்கள்கிழமை மேம்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தப் பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையான மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸ் உண்டாக்கிய குளிர், பிற்பகலில் வெப்பநிலை 19.7 டிகிரி செல்சியஸுக்கு உயரவே தில்லி குளிரில் இருந்து சற்று மீண்டது,
ஈரப்பதம் 43 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை ஏறி இறங்கியது.
செவ்வாய்கிழமை முதல் வியாழன் வரை காற்றின் தரம் மிக மோசம் பிரிவிலேயே இருக்கும் எனக் கணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

