மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வயநாடு: இலவச டேட்டா வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

பொதுமக்களுக்குத் துணை நிற்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச டேட்டாவை அறிவித்துள்ளது.

News image

வயநாடு நிலச்சரிவு - PTI

Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:21 am

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் துணை நிற்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச டேட்டாவை அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியாமல் உள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

வயநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆதரவாகக் கட்டுப்பாடு அறைகள், நிவாரண விநியோக மையங்கள் மற்றும் அவசரகால பதில் குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் இல்லாவிட்டாலும் டவர்கள் செயல்படுவதை உறுதிசெய்ய டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்திற்கு விரைவான இணைய இணைப்புகளும், கேரள அரசின் சுகாதாரத் துறைக்கு கட்டணமில்லா எண்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 4ஜி சேவையை வழங்கி வருகிறது.

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

வேலிடிட்டி நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாள்களுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பயனர்களுக்கு உதவும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயனர்கள் அதிகபட்சம் 7 நாள்களுக்கு தினமும் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் இருக்க முடியும். இந்த கூடுதல் டேட்டா தானாகவே சேர்க்கப்பட்டுவிடும்.

போஸ்ட்பெய்டு பயணர்கள் தங்களது கட்டணத்தை பத்து நாள்கள் கடந்து கட்ட முடியும். இதுதவிர கேரள மாநிலத்தில் உள்ள வோடபோன் ஐடியா ஸ்டோர்கள் அனைத்தையும் கலெக்ஷ்ன் பாயிண்ட்களாக மாற்றுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நினைப்போர் தங்களுக்கு அருகாமையில் உள்ள வி ஸ்டோர்களுக்கு சென்று அவற்றை வழங்கலாம். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர்ந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.