வருமானம் உயரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!
இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...


தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
நண்பர்களிடத்தில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்படும். தொழிலிலும் கவனமாக இருப்பீர்கள். உடனிருப்போரின் ஆதரவும் குறையும். வருமானம் சீராக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பிறர் உதவுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் துணிச்சலாக முடிவுகளை எடுப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு சில நன்மைகள்ஏற்படும். பெண்களுக்கு குழந்தைகளால் மலர்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனத்துடன் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பிறருக்கு பணம் வாங்கித் தர வேண்டாம். ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வியாபாரிகள் நேரடி விற்பனையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும். அரசியல்வாதிகள் யோசித்து முடிவெடுப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு வருமானம் மேலோங்கும். பெண்கள் பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நண்பர்கள் சாதகமாக நடப்பார்கள். பொருளாதார வளம் மேம்படும். எதிர்பார்த்த வெற்றிகள் தேடி வரும். உடன்பிறந்தோருக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு ஈடுகொடுத்து பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக நடப்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். கலைத் துறையினருக்கு உற்சாகம் பெருகும். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நல்ல சிந்தனைகளால் மனம் உற்சாகம் அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்கவும். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.
பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சுப காரியங்கள் நடக்கும். மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் குறைகளைத் திருத்திக் கொள்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு தன்னம்பிக்கை பலப்படும். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் மதிப்பும் மரியாதையும் உயரும். சொத்துப் பிரச்னைகள் விலகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் உழைத்து வெற்றி பெறுவீர்கள். பெண்கள் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள்.
மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பேச்சால் பிறரைக் கவருவீர்கள். சமுதாயப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிலப் பிரச்னைகள் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகள் உள்கட்சிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கலைத் துறையினர் ஒப்பந்தங்களைத் தாமதமாக முடிப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதியஅனுபவங்களைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆதரவாய் இருப்பார்கள். குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் கவனத்துடன் செயல்படவும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் நண்பர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம்} ஆகஸ்ட் 2.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உடல்நலமும் மனவளமும் சீராகும். உங்கள் காரியங்களை முடித்துவிடுவீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் கடினமான வேலைகளை ஒதுக்குவார்கள். வியாபாரிகளுக்கு வாகனப் பராமரிப்புச் செலவு கூடும். விவசாயிகள் இடைத்தரகர்களைத் தவிர்த்து விற்பனை செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் பயணங்களில் வெற்றியைக் காண்பீர்கள். பெண்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவர்கள் பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 3,4,5.
வருமானம் படிப்படியாக உயரும். எதிர்ப்புகள் அகலும். மனக் கவலைகள் நீங்கும். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை குறித்த காலத்துக்குள் முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்-வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களை லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் பதற்றப்படாமல் லாபம் அடைவீர்கள். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களால் நன்மை உண்டாகும். பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள்.
மாணவர்கள் நல்ல நண்பர்களிடம் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 6,7.
உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள். கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளைக் கௌரவிப்பீர்கள். கலைத் துறையினர் பயணங்களால் வெற்றி பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் குழப்பங்களைத் தவிர்த்து தெளிவுடன் செயலாற்றுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 8.
உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். அரசு சலுகைகள் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சக ஊழியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் கொள்கைகளில் விடாப்பிடியாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய கலைநுட்பங்களைக் கற்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...