தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

சத்தீஸ்கரில் நிகழ்ந்த கோர விபத்தில் நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

News image

Two killed in road accident in Telangana's Ranga Reddy

Updated On :29 ஏப்ரல் 2024, 3:29 am

பீமதாரா: சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டிரக் மோதிய விபத்தில் 9 பேர் இறந்த நிலையில், 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுப நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டுவிட்டு, உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், ஒரு டிரக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கத்தியா கிராமம் அருகே, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் பத்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சரக்குகள் ஏற்றப்பட்ட லாரி, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவில் டிரக் வந்துகொண்டிருந்தபோது, லாரி நின்றிருப்பதை ஓட்டுநர் கவனிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருபப்தாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.