மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது புதன்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து விபத்து குறித்து...

News image

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:35 am

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது புதன்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூப்பன்ப்பட்டி விலக்கு அருகே புதன்கிழமை அதிகாலை சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு சிமென்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் ஓட்டிச் சென்றார்.

இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் சரவணன், பெண் பயணிகள் 8 பேர் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் கையமடைந்தனர். பேருந்தின் முன்பகுதி முழுமையாகச் சேதமடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் வாகனத்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த பேருந்து ஓட்டுநரை மீட்டனர்.

காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

A private omni bus travelling from Coimbatore to Nagercoil met with an accident near Moopanpatti Vilakku on the national highway in Kovilpatti, Thoothukudi district. The bus collided with a stationary cement mixer tanker lorry parked on the road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.