தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை!

கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை அளித்திருப்பது பற்றி...

News image

கேரள தலைமைச் செயலகம் - EPS

Updated On :22 ஏப்ரல் 2026, 5:46 am

கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாளை (ஏப். 23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது.

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு நாள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க வசதியாக நாளை அவர்களுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Holiday Tomorrow for Tamil nadu peoples who ​​Working in Kerala!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.