மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 5:51 pm

அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள சூளை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41), பனியன் தொழிலாளி.

இவா் சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்று கொண்டிருந்துள்ளாா்.

அவிநாசி-கருமாபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த காா் செந்தில்குமாரின் வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த செந்தில்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.