நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியுள்ளது. அதில் முதல் முறையாக கூட்டத்தொடரை நடத்தும் வகையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னா், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புக் கூட்டத்தொடா் அமா்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நாளை நடைபெறவுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி
இந்தக் கூட்டத்தொடரின்போது மேலும் சில புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்து எதிா்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அதிா்ச்சி அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்குரைஞா்கள் திருத்த மசோதா, பத்திரிகைகள்-இதழ்கள் பதிவு மசோதா, தபால் நிலைய மசோதா உள்ளிட்டவற்றின் மீதும் சிறப்புக் கூட்டத்தொடரின்போது விவாதம் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு - ப. சிதம்பரம் எம்.பி. தகவல்

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

‘கன்னியாகுமரியில் 40 ஆண்டுகள் வணிகம் செய்யும் வியாபாரிகளின் கடைகளை மாற்றக் கூடாது’
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

