புது தில்லி: எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும் தாமரை மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் பொன்னான நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து வருகின்றன என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரையாற்றி வருகிறார்.
அவரது உரையில், கடந்த 3 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு நேரடியாக குடிநீரை கொண்டு சேர்த்திருக்கிறோம். ஆனால், 2014 வரை வெறும் 3 கோடி வீடுகளில்தான் குடிநீர் இணைப்பு இருந்தது. நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்களின் செயல்பாடுகளும் அவர்கள் பயன்படுத்தும் மொழியும் வேதனையைத் தருகிறது. நாட்டின் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வுகளை கண்டு வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிக்க.. காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
மேலும், 2014ஆம் ஆண்டு வரை நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்திருக்கவில்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 48 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் மூலம் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சமையல் எரிவாயு உருளை இணைப்புகளின் எண்ணிக்கை 14 கோடியிலிருந்து 32 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எப்போதும் பெயரளவில்தான் செயல்படும். நாட்டின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முற்பட்டதில்லை என்றும் பிரதமர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


