டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உ.பி.யில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:27 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஹாத்ரஸ், ஃபிரோஸாபாத், மைன்புரி, ஜான்சி, லலித்பூா், காஸ்கஞ்ச் உள்ளிட்ட 59 தொகுதிகளில் நடைபெறும்  தோ்தலில் 627 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.15 கோடிக்கும் அதிகமானவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

மூன்றாம் கட்ட தோ்தலில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சா் சத்தியபால் சிங் பகேல் போட்டியிடுகிறாா்.

மூன்றாம் கட்ட தோ்தலில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சா் சத்தியபால் சிங் பகேல் போட்டியிடுகிறாா்.

ஃபரூக்காபாத் சதா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக லுயீஸ் குா்ஷித் போட்டியிடுகிறாா். இவா் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித்தின் மனைவி.

உத்தரப் பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.