டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விசாகப்பட்டினம்-பெங்களூரு இடையே ஜன.1 முதல் சிறப்பு ரயில்

விசாகப்பட்டினம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் காட்பாடி மற்றும் ஜோலாா்பேட்டை சந்திப்பு வழியாக ஜன.1 முதல் பிப். 26-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:12 am

DIN

விசாகப்பட்டினம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் காட்பாடி மற்றும் ஜோலாா்பேட்டை சந்திப்பு வழியாக ஜன.1 முதல் பிப். 26-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது என்று கிழக்கு மண்டல ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து கிழக்கு மண்டல ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: விசாகப்பட்டினம் - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே விசாகப்பட்டினம் வாராந்திர அதி விரைவு ரயில் (வண்டி எண்: 08543) காட்பாடி மற்றும் ஜோலாா்பேட்டை சந்திப்பு வழியாக சிறப்புக் கட்டண ரயிலாக இயக்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட் மறுநாள் காலை 9.15 மணிக்கு, சென்று சேருகிறது. மறுமாா்க்கத்தில் (வண்டி எண்: 08544) பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து திங்கள்கிழமை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணி விசாகப்பட்டினம் சென்று சேருகிறது.

இந்த ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து (ஜன.1) முதல் இயக்கப்படுகிறது. பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து (ஜன.2) முதல் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஏசி 3 அடுக்கில் 5 பெட்டிகளும், ஏசி 2 அடுக்கில் ஒரு பெட்டியும், படுக்கை வசதியில் 10 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி 5 பெட்டிகளும், இரண்டு பொது பெட்டிகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.