வங்கதேசத்தில் ஷிப்சார் நகர் அருகே பத்மா நதியில் இன்று காலை இரண்டு படகுகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 26 பேர் பலியாகினர்.
திங்கள்கிழமை காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
படகு அதிவேகமாக சென்றதாலும், ஓட்டுநர் அனுபவமற்ற சிறுவன் என்பதாலும் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் அதிகாரி ஆஷிகுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


