இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் விலகியுள்ளார்.


புது தில்லி: அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் விலகியுள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், வழக்கு விசாரணையிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் இந்த வழக்கு விசாரணை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரைச் சோ்ந்த சுகேஷ் சந்திரசேகரை தில்லி குற்றப் பிரிவு போலீஸாா் 2017-இல் கைது செய்து, அது தொடர்பான வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...