மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ம.பி.யில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

MP bus accident: 2 more bodies recovered; toll rises to 49 .

Updated On :17 பிப்ரவரி 2021, 6:01 am

மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஸித்தி மாவட்டத்திலிருந்து சத்னாவுக்கும் சென்றுகொண்டிருந்த பேருந்து, பாட்னா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த  25 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 47 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். 

செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் புதன்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டன. இதில், மேலும் இருவரின் சடலங்கள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது பன்சாகர் அணை திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ஸித்தியின் கூடுதல் காவல்துறை ஆய்வாளர் அஞ்சுலதா பாட்டில் தெரிவித்தார்.

இரண்டு உடல்களும், விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் காவல் நிலைய எல்லைக்குள் கண்டறிந்தனர். இதுவரை 49 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.