பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

‘விவசாயிகள் பிரச்னை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க தயார்’: மத்திய அமைச்சர்

விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.

News image

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2021, 9:20 am

விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தருக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அமைச்சர் தோமர் கூறியது:

“விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏன் விவாதிக்க தயாராக இல்லை? அவர்கள் ஊடக வெளிச்சத்தை தான் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தில்லி ஜந்தர் மந்தரில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.